Sunday, October 17, 2010

வீராணம் ஏரி பாசன,கடைமடை கிராமங்கள் போதுமான நீரின்றி பயிர்கள் காய்வதற்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம்


வீராணம் பாசன பகுதி உழவர்கள் குறுவைப்பயிரை இழந்து பல வருடங்களாகிவிட்டன.
பயிரிடப்படும் சம்பா பயிருக்கும் காலம் கடந்துதான் வீராணம் ஏரி நீர் திறந்துவிடப்பட்டது.

பாசனத்திற்கு போதுமான அளவு நீர் திறந்துவிடாததாலும் பாசன வாய்க்காலில் உள்ள செடி,கொடி,புதர்கள் அகற்றப்படாததாலும் கீரப்பாளையம்,மேலமூங்கிலடி, தையாக்குப்பம், கான்சாகிப்மண்டபம்,அம்பலத்தாடி குப்பம், மேலசொக்கனாதன்பேட்டை, பாலூத்தாங்கரை, கீழமூங்கிலடி,வாள்காரமேடு,கண்ணங்குடி,மடப்புரம் போன்ற கடைமடை கிராமங்களில் உள்ள நாற்றங்கால்களும் காய்ந்து வருகின்றன.நடவுக்கு போதிய நீரில்லை.நாற்றுக்கும் வயது ஏறிக்கொண்டிருக்கிறது.இதனால் உழவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.

எனவே உழவர்களுக்கு ஏற்படவுள்ள பெரும் நட்டத்தை தவிர்க்க கடைமடை பகுதிகளுக்கு தடையின்றி தேவையான நீர் கிடைக்க பாசன வாய்க்காலில் உள்ள செடி,கொடி,புதர்களை அகற்றவும்,ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை தமிழக உழவர் முன்னணி கோரியுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment