Wednesday, November 7, 2012

தலைஞாயிறு சர்க்கரை ஆலை போராட்டம் வெற்றி!



உழவர்கள் கொடுத்த கரும்புக்கு எட்டு மாதங்களாக கொடுக்கப்படாத
தொகையைக் கேட்டு தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். சர்க்கரை ஆலையில்
உழவர்கள் உள்ளிருப்பு போராட்டம் வெற்றி!
தலைஞாயிறு சர்க்கரை ஆலை உழவர்கள் விளைவித்துக் கொடுத்த கரும்புக்கான பணத்தைக் கொடுக்காமல் கடந்த 8 மாதங்களாக உழவர்களை
வஞ்சித்து வந்த்து.
ஏற்கனவே ஆலையில் இயங்கி வந்த சங்கமும் ஆலையோடு கூட்டணி
வைத்துக் கொண்டு ஏய்த்துக் கொண்டிருந்த்து.
இதையறிந்த உழவர்கள் தன்னெழிச்சியாக களமிறங்கி ஆலைக்குள்
உள்ளிருப்பு போராட்ட்த்தை துவக்கினர். சர்க்கரை லாரிகள் வெளியே
செல்வதை தடுத்து நிறுத்தினர்.போராட்ட்த்தின் விளைவாக தமிழக அரசு
ரூ.17,34,62,000-ஐ ஆலைக்கு ஒதுக்கியுள்ளதாக அறிவித்த்து.
ஆலை 8 மாதமாக பண்ம் வழங்காத்தால் கூட்டுறவு வங்கிகள் வசூலிக்க்க்
கூடிய வட்டியை ஆலையே ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்
உழவர்கள் 6.11.12 அன்று போராட்ட்த்தை திரும்ப பெற்றனர்.
போராட்ட்த்தில் மற்ற உழவர்களுடன் தமிழக உழவர் முன்னணியின் நாகை மாவட்ட அமைப்பளர் திரு.கார்த்திகேயன் முன் நின்று பணியாற்றினார்.
த.உ.மு.கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நேரில் சென்று வாழ்த்தினர்.
கட்சி வேலிகளைக் கடந்து உழவர்கள் போராடினால் வெற்றிப் பெறலாமென்பதை மீண்டும் தலைஞாயிறு போராட்டம் உறுதிப்படுத்தியது.