Friday, February 26, 2010

இந்தியாவின் 2010 பட்ஜெட்


இந்திய அரசின் உழவர் விரோத அறிவிப்புகளின் தொகுப்பாகவே 2010-11 க்கான வரவு-செலவு திட்டமும் அதையொட்டிய அறிவிப்புகளும் விளங்குகின்றன.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக வேதியியல் உரங்களின் விலையேற்றத்திற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.உரமானியங்களை பெருமளவு திரும்பப் பெற்றுக்கொண்டு அவற்றின் மீதான விலைக் கட்டுப்பாட்டை இந்திய அரசு கைவிட்டுவிட்டது.இதன் விளைவாக யூரியா விலை 10விழுக்காடும் பிற உரங்களின் விலை எந்த கட்டுப்பாடின்றியும் கடுமையாக உயர இருக்கின்றன.

இன்னொரு புறம் பி.ட்டி கத்திரிக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையையும் கூட விலக்குவதற்கான முயற்சி மாண்சாண்டோ விதை நிறுவனத்தின் வலியுறுத்தலால் தலைமை அமைச்சர் தலைமையிலேயே நடக்கிறது.இப்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள உயிரி தொழில் நுட்ப வரைவு சட்டம் மரபீனி மாற்ற தொழில் நுட்பத்திற்கு எதிரான விவாதத்தையே மறுத்து பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு எதிராக கருத்துரைக்கும் உழவர்களையும் அறிவாளர்களையும் கொடுஞ்சிறையில் தள்ளுவதாக மிரட்டுகிறது.இந்திய அரசு உழவர்களை நசுக்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணியாற்ற விரும்புகிறது.என்பத்ற்கு இது மேலும் ஒரு சான்று.

நிதியமைச்சர் முன்வைத்துள்ள வரவு-செலவு பெட்ரோல்.டீசல் விலை ஏறத்தாழ ரூ2.75 உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோலிய பொருட்களின் மீதான விலைக்கட்டுபாடுகளை கைவிடுவதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.இந்த எரியெண்ணெய் விலை உயர்வு எல்லா பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழி ஏற்படுத்துவதோடு வேளாண்மையையும் கடுமையாக பாதிக்கும்.

””தமிழ்நாட்டை பொறுத்தளவில் இந்த பெட்ரோலி பொருட்களின் விலையேற்றம் தேவையற்றது.தமிழ்நாட்டில் இம்மாநில தேவையை ஏறத்தாழ நிறைவு செய்யும் அளவிற்கு பெட்ரோலிய உற்பத்தி உள்ளது.இங்கு கிடைக்கும் பெட்ரோலியத்தை தூய்மைபடுத்தி தமிழ்நாட்டிற்கு வழங்கினாலே உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் விலையை தமிழக மக்களும்,உழவர்களும் சுமக்க வேண்டிய தேவையில்லை.மேலும் பெட்ரோல்,டீசல் விலையில் சுமார் 39 விழுக்காடு இந்திய அர்சு விதிக்கிற வரியின் காரணமாக வ்ருவது.இந்த இரண்டும் இல்லாமல் இருந்தால் இப்போதுள்ள விலையில் பாதி விலைக்கு பெட்ரோல்,டீசலை தமிழகத்தில் வழங்கமுடியும்.””

எனவே இந்திய அரசு மக்களுக்கும்,உழவர்களுக்கும் எதிராக வெளியிட்டுள்ள மேற்கண்ட அறிவிப்புகளை திரும்ப பெற வேண்டுமென தமிழக உழவர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Tuesday, February 16, 2010

கோவை பல்கலைகழகம் மூலமாக பி.ட்டி கத்திரியை உலவவிடாதே!



பி.ட்டி கத்திரி தடையை ஆதரித்தும்,கோவை பல்கலைகழகம் மூலமாக பி.ட்டி கத்திரியை உலவவிட இருக்கும் தமிழக அரசின் செயலை கண்டித்தும்..சிதம்பரத்தில் தமிழக உழவர் முன்னணியின் தட்டி..

Sunday, February 14, 2010

காவிரி போராட்ட வீரர் கரூர் P.R.K மறைவு

காவிரி உரிமையை மீட்க தனது இறுதி மூச்சு வரை போராடிய P.R.K என்று அன்புடன் அழைக்கப்பட்ட கரூர் குப்புசாமி அவர்கள் மறைவுக்கு தமிழக உழவர் முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

காவிரி குறித்து குப்புசாமி அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார்.காவிரி உரிமையை மீட்கும் அவரது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வெற்றி பெற தமிழக உழவர் முன்னணி உறுதி ஏற்கிறது.

Saturday, February 6, 2010

மரபணு மாற்ற கத்திரிக்காயை இந்தியாவில் தடை செய்


04-02-2010

நடுவன் சுற்று சூழல் அமைச்சர் திரு.ஜெய்ராம்ரமேசுக்கு த.உ.மு கோரிக்கை

மரபணுக்களின் தன்மையையும் வரிசையையும் மாற்றி அமைத்து உருவாக்கப்படும் மரபீனி மாற்ற கத்திரிக்காயை உரிய ஆய்வின்றி இந்திய அரசு அனுமதிக்க முன்வருவது ஆபத்தானது.

மரபீனி மாற்றப் பயிர்கள் சாகுபடிச் செலவை பன்மடங்கு அதிகரித்து உழவர்களை கடானாளியாக்குகிறது.மராட்டிய மாநிலம் விதர்ப்பாவிலும்,ஆந்திராவிலும் மரபீனி மாற்றப் பயிரான பீட்டி பருத்தி சாகுபடி செய்த உழவர்கள் கழுத்துமுட்டும் கடனில் சிக்கி,பல்லாயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டனர்.தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்திலும்,சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் பீட்டி பருத்தி சாகுபடி செய்த உழவர்கள் பேரிழப்புக்கு உள்ளாயினர்.


மரபீனி பயிர்கள் பொருளாதார வகையில் உழவரக்ளுக்கு ஏற்றதல்ல.ஏனெனில் மரபீனி மாற்றப்பயிர்களின் விதையிலிருந்து அதற்கென்றே தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி ஊக்கிகள் வரை அனைத்தும்,அதிகம் செலவு கொண்டவை. அந்த அளவுக்குமரபீனி மாற்றப்பயிர்கள் ஒவ்வாமை,மலட்டுத்தன்மை,கருச்சிதைவு,இரத்த உறைவைக் குறைப்பது,சிறுநீரகக் கோளாறு போன்ற பாதிப்புகளை உண்டாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

அந்தந்த மண்ணுக்குரிய மரபான பயிர்களுடன் மரபீனி மாற்றப்பயிர்களின் மகரந்தங்கள் கலந்து அவற்றை அழித்து விடுகின்றன.இது உணவு பன்மையையும்,உணவு தற்சார்பையும் சீர்குலைக்கும் ஆபத்து உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பன்மையை மரபீனிப்பயிர்கள் ஒழித்துவிடும் என்ற காரணத்தை எடுத்துக்காட்டி முனைவர்.எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான "வேளான்மையில் உயிரித் தொழில் நுட்பப்பயன்பாடு குறித்த செயல்பாட்டுக் குழு" இப்பயிர்களை அங்கு அனுமதிக்கக்கூடாதென எச்சரித்துள்ளது.

மேலும் இச்செயல் விதைகளுக்கும்,பூச்சிகொல்லிகளுக்கும் நிரந்தரமாக அந்நிய நாடுகளை சார்ந்திருக்கச்செய்து நமது வேளான்மையை முடக்கிவிடும் ஆபத்துள்ளது.

ஆகவே இந்திய அரசு மரபீனி மாற்றப்பயிர்கள் அனைத்தையும் இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென தமிழக உழவர் முன்னணி கோரியுள்ளது.

நெல் விலை வீழ்ச்சி-அரிசி விலை கடும் உயர்வு குவிண்டால் நெல் ரூ1500 என அறிவிக்க தமிழக உழவர் முன்னணி கோரிக்கை


03-02-2010

சென்ற ஆண்டு 60கிலோ பிபிடி நெல் ரூ850க்கு விற்றது.இவ்வாண்டு ரூ730 அல்லது ரூ740க்குதான் வாங்கப்படுகிறது

காலம் தாழ்ந்த காவிரி நீர் வரத்து,தாறுமாறான மின்வெட்டு,ஊகிக்க முடியாத உழவுத்தொழிலாளர்களின் ஊதிய உயர்வு,பருவம் தவரிய மழைப்பொழிவு,நுகர்பொருள்களின் விலையேற்றம் ஆகிய அனைத்து முனைகளிலும் நெருக்குதல்களைச் சந்தித்து உழவர்கள் விலைவித்த நெல்லுக்கு அடிமாட்டு விலை வழங்கப்படுவது உழவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

உழவர்கள் விளைவித்த நெல்லின் விலை இவ்வளவு கீழாக அழுத்தப்படும்போதுதான் வெளிச்சந்தையில் அரிசியின் விலை கிலோ 40ரூபாய் என ஏறியுள்ளது.

உழவர்கள் பயன்படுத்தும் பிற நுகர்வு பொருட்களின் விலை இந்த ஓராண்டில் மட்டும் 30விழுக்காடு உயர்ந்துள்ளது.

இவ்வாறு நெருக்கடியில் சிக்கியுள்ள உழவர்களையும் வேளான்மையையும் பாதுகாக்க தமிழக அரசு நெல் கொள்முதல் விலையை குவிண்டால் ரூ1500 என அறிவித்து தனியார் வணிகர்களும் இதே விலையை
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரியுள்ளது.