Saturday, February 6, 2010

மரபணு மாற்ற கத்திரிக்காயை இந்தியாவில் தடை செய்


04-02-2010

நடுவன் சுற்று சூழல் அமைச்சர் திரு.ஜெய்ராம்ரமேசுக்கு த.உ.மு கோரிக்கை

மரபணுக்களின் தன்மையையும் வரிசையையும் மாற்றி அமைத்து உருவாக்கப்படும் மரபீனி மாற்ற கத்திரிக்காயை உரிய ஆய்வின்றி இந்திய அரசு அனுமதிக்க முன்வருவது ஆபத்தானது.

மரபீனி மாற்றப் பயிர்கள் சாகுபடிச் செலவை பன்மடங்கு அதிகரித்து உழவர்களை கடானாளியாக்குகிறது.மராட்டிய மாநிலம் விதர்ப்பாவிலும்,ஆந்திராவிலும் மரபீனி மாற்றப் பயிரான பீட்டி பருத்தி சாகுபடி செய்த உழவர்கள் கழுத்துமுட்டும் கடனில் சிக்கி,பல்லாயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டனர்.தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்திலும்,சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் பீட்டி பருத்தி சாகுபடி செய்த உழவர்கள் பேரிழப்புக்கு உள்ளாயினர்.


மரபீனி பயிர்கள் பொருளாதார வகையில் உழவரக்ளுக்கு ஏற்றதல்ல.ஏனெனில் மரபீனி மாற்றப்பயிர்களின் விதையிலிருந்து அதற்கென்றே தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி ஊக்கிகள் வரை அனைத்தும்,அதிகம் செலவு கொண்டவை. அந்த அளவுக்குமரபீனி மாற்றப்பயிர்கள் ஒவ்வாமை,மலட்டுத்தன்மை,கருச்சிதைவு,இரத்த உறைவைக் குறைப்பது,சிறுநீரகக் கோளாறு போன்ற பாதிப்புகளை உண்டாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

அந்தந்த மண்ணுக்குரிய மரபான பயிர்களுடன் மரபீனி மாற்றப்பயிர்களின் மகரந்தங்கள் கலந்து அவற்றை அழித்து விடுகின்றன.இது உணவு பன்மையையும்,உணவு தற்சார்பையும் சீர்குலைக்கும் ஆபத்து உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பன்மையை மரபீனிப்பயிர்கள் ஒழித்துவிடும் என்ற காரணத்தை எடுத்துக்காட்டி முனைவர்.எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான "வேளான்மையில் உயிரித் தொழில் நுட்பப்பயன்பாடு குறித்த செயல்பாட்டுக் குழு" இப்பயிர்களை அங்கு அனுமதிக்கக்கூடாதென எச்சரித்துள்ளது.

மேலும் இச்செயல் விதைகளுக்கும்,பூச்சிகொல்லிகளுக்கும் நிரந்தரமாக அந்நிய நாடுகளை சார்ந்திருக்கச்செய்து நமது வேளான்மையை முடக்கிவிடும் ஆபத்துள்ளது.

ஆகவே இந்திய அரசு மரபீனி மாற்றப்பயிர்கள் அனைத்தையும் இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென தமிழக உழவர் முன்னணி கோரியுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment