Monday, December 9, 2013

வேளாண் காப்பீட்டுத்திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காதே! தமிழக உழவர் முன்னணி கோரிக்கை.

தமிழக உழவர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயற்குழு கூட்டம் 8.12.2013 அன்று தலைவர் கோ.சிவராமன் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம், துணைச்செயலர் இரா.சரவணன், கீரப்பாளையம் ஒன்றிய செயலர் சாக்காங்குடி என்.ஜெயபாலன், குமராட்சி ஒன்றிய செயலர் தங்க.கென்னடி, செயற்குழு உறுப்பினர்கள் சிவபுரி வே.பொன்னுசாமி, மேலமூங்கிலடி சி.இராசேந்திரன், வி.இராஜா, சிவாயம் கோ. நாராயணசாமி, பண்ணப்பட்டு மு.சம்பந்தம், பொன்னந்திட்டு அ.மதிவாணன், சிதம்பரம் ம.கோ.தேவராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்., என்ற இந்திய அரசு நிறுவனத்திடம் உள்ள உழவர்களுக்கான பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தை மாற்றி அமைத்து அதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது அதை தமிழக உழவர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இம்முடிவு காப்பீட்டு கட்டணத்தொகை அதிகரிப்பில் முடிவடையும். ஏற்கனவே லாபமற்ற விலையால் நசிந்து வரும் உழவர்கள் மேலும் பாதிக்கப்படுவர். ஆகவே, இந்திய அரசு இம்முடிவை கைவிட வேண்டும்.

2. இம்முடிவை கைவிடும்படி தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

3.அண்மையில் உள்ள புதுச்சேரி அரசு செய்வதைப்போல் உழவர்களின் பயிர்க்காப்பீட்டு கட்டணம் முழுவதையும் தமிழக அரசே செலுத்த வேண்டும்.

4. வேளாண் காப்பீட்டுத்திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடக்கோரி, கையொப்பமியக்கம் நடத்தி இந்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

5.வீராணம் ஏரி நீர் கோரிக்கைகளை ஏற்க கொள்ளிடம் வடிநிலக்கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரம் அற்று இருப்பதால் வீராணம் ஏரியின் பராமரிப்பு, நீர் நிர்வாகம், நீர்ப்பங்கீடு ஆகிய அனைத்தும் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என மீண்டும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

Post a Comment