Saturday, February 6, 2010

நெல் விலை வீழ்ச்சி-அரிசி விலை கடும் உயர்வு குவிண்டால் நெல் ரூ1500 என அறிவிக்க தமிழக உழவர் முன்னணி கோரிக்கை


03-02-2010

சென்ற ஆண்டு 60கிலோ பிபிடி நெல் ரூ850க்கு விற்றது.இவ்வாண்டு ரூ730 அல்லது ரூ740க்குதான் வாங்கப்படுகிறது

காலம் தாழ்ந்த காவிரி நீர் வரத்து,தாறுமாறான மின்வெட்டு,ஊகிக்க முடியாத உழவுத்தொழிலாளர்களின் ஊதிய உயர்வு,பருவம் தவரிய மழைப்பொழிவு,நுகர்பொருள்களின் விலையேற்றம் ஆகிய அனைத்து முனைகளிலும் நெருக்குதல்களைச் சந்தித்து உழவர்கள் விலைவித்த நெல்லுக்கு அடிமாட்டு விலை வழங்கப்படுவது உழவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

உழவர்கள் விளைவித்த நெல்லின் விலை இவ்வளவு கீழாக அழுத்தப்படும்போதுதான் வெளிச்சந்தையில் அரிசியின் விலை கிலோ 40ரூபாய் என ஏறியுள்ளது.

உழவர்கள் பயன்படுத்தும் பிற நுகர்வு பொருட்களின் விலை இந்த ஓராண்டில் மட்டும் 30விழுக்காடு உயர்ந்துள்ளது.

இவ்வாறு நெருக்கடியில் சிக்கியுள்ள உழவர்களையும் வேளான்மையையும் பாதுகாக்க தமிழக அரசு நெல் கொள்முதல் விலையை குவிண்டால் ரூ1500 என அறிவித்து தனியார் வணிகர்களும் இதே விலையை
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரியுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment