எம்மைப் பற்றி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உழவுக்கு நெறிகண்ட வள்ளுவனைப் பெற்று,உலகின் முதல் அணையாம் கல்லணையைக் கட்டி சிலந்தி வலைப்போல் நீர் வழித்தடங்கள் அமைத்து,மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானைக்கட்டி போரடித்த தமிழ்ச்சமூகம் இன்று வேளாண்மையில் தனது அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கிறது.

* ஆற்றுப்பாசன உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன

* தமிழக சந்தை தமிழக உழவர்களுக்கில்லை

* வேளான் விளைப்பொருளின் விலையை முடிவுசெய்யும் அதிகாரம் தமிழருக்கில்லை

* பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான விதைச்சட்டம்

* வெள்ளம், வறட்சி, பூச்சித்தாக்குதல், பயிர்க் காப்பீடு,மரபீனி மாற்று பயிர்கள்,இயற்கை வேளாண்மை போன்ற எப்பிரச்சினையிலும் இந்திய அரசின் தயவின்றி தமிழர்களால் ஒரு துரும்பைக்கூட அசைக்க இயலாது.

இந்நிலையை மாற்றி தமிழக உழவர்களுக்கு ஒரு இலாபம் தரும் தொழிலாக வேளாண்மையை மாற்றி அமைக்கும் போர்குணம் கொண்ட அமைப்பாக,எந்த தேர்தல் கட்சிக்கும் வாக்கு வங்கியாக செயல்படாத அமைப்பாக,அமைப்பு என்ற வகையில் தேர்தலில் பங்கெடுக்காத அமைப்பாக தமிழக உழவர் முன்னணிசெயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

0 கருத்துகள்:

Post a Comment