Wednesday, December 5, 2012

கருகும் சம்பா பயிரைப் பாதுகாக்க -தமிழக உழவர் முன்னணி உண்ணாப் போராட்டம்



கருகும் சம்பா பயிரைப் பாதுகாக்க, காவிரி நீரை கர்நாடகம் நாள்தோறும் 2 டி.எம்.சி. அளவிற்குத் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகஉழவர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில், இன்று(04.11.2012), காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாப் போராட்டம் நடைபெற்றது.


சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் நடைப்பெற்ற இப்போராட்டதிற்கு குமராட்சி தமிழக உழவர் முன்னணி ஒன்றியத் தலைவர்திரு தங்க. கேன்னடி தலைமையேற்றார். த.உ.மு. மாவட்டச் செயலாளர் திரு சி. ஆறுமுகம், மாவட்டத் தலைவர் திரு அ.கோ.சிவராமன், மாவட்டஒருங்கிணைப்பாளர் திரு மா.கோ.தேவராசன், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பொறியாளர் திரு என்.செயபாலன், மையக்குழு உறுப்பினர் திரு.இராசேந்திரன்,  திரு மதிவாணன், மாவட்டத் துனை செயலாளர் திரு சரவணன் உள்ளிட்ட திரளான உழவர் முன்னணிப் பொறுப்பாளர்களும்,உழவர்களும் இதில் பங்கேற்றனர். மாலையில் உண்ணாப் போராட்டத்தை நிறைவு செய்து பேசிய, தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி பொதுச் செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன், “இரு முதலமைச்சர்கள் பேச்சு வார்த்தையில், ஒரு சொட்டுக் காவிரித் தண்ணீரும்திறந்து விட மாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்தது தமிழ்நாட்டு உழவர்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்தத்தமிழினத்தையே இழிவுபடுத்தியதாகும்.

நேற்று(03.12.2012) காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்த போது, உச்சநீதிமன்ற நீதிபதி, நாங்கள் 20 அல்லது 25 டி.எம்.சி. திறந்து விட வெண்டும்என ஆணையிட்டால் கர்நாடகத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்டார்கள். அதற்கு, கர்நாடகத் தரப்பு மூத்த வழக்குரைஞர் நாரிமன்அப்படியொரு ஆணையிட்டால் அதை கடுமையாக எதிர்ப்போம் என்று பதிலுரைத்தார். இருதரப்பு வாதங்களையு்ம் கேட்டு ஆவணங்களை ஆய்வுசெய்து ஆணைப் பிறப்பிக்க வேண்டிய நீதிமன்றம், நாங்கள் உத்தரவிட்டால் அதை செயல்படுத்துவீர்களா எனக் கேட்பது இதுவரையிலும்நீதிமன்றங்களில் நிகழாத இழிநிலையாகும். தமிழ்நாட்டிற்கு ஞாயம் வழங்குகிற போது மட்டும், எதிர்த்தரப்பை இவ்வாறு கேட்பதுஉச்சநீதிமன்றமும் தமிழகத்திற்கு எதிராக இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது. இந்திய அரசு கர்நாடகத்தின் அடாவடிக்கு துணைபோவதால்தான், இவ்வாறு அப்பட்டமான சட்ட மீறலில் கர்நாடகம் ஈடுபடுகிறது.

சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் செயல்படுவதாக இருந்தால், 1956 மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தகராறு சட்டப்படி, கர்நாடக காவிரிஅணைகளின் நிர்வாகப் பொறுப்பை இந்திய அரசு தற்காலிகமாக தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும். அரசமைப்பு சட்டவிதி 355இன்படி, கர்நாடகத்திற்கு தண்ணீர்திறந்துவிடும்படி தாக்கீது அனுப்ப வேண்டும்.
தமிழக முதலமைச்சர் செயலலிதா, இனியாவது தனது அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அனைத்துக் கட்சி மற்றும்அனைத்து உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன்னோடு அணிதிரட்டிக் கொண்டு, “கர்நாடகத்தைப்புறக்கணிப்போம்” என்று செயலில் இறங்க வேண்டும். கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதார தடை விதிக்க வேண்டும். கர்நாடக அரசியோ,கர்நாடக தயாரிப்புப் பொருள்களோ தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க வேண்டும். கர்நாடக அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்தால்,அவர்களை வரவேற்பதோ பாதுகாப்புக் கொடுப்பதோ கூடாது. நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்திற்கு செல்லதாமல் தடுத்து நிறுத்தவெண்டும். இந்திய அரசுக்கெதிராக அரசியல் மற்றும் பொருளியல் அழுத்தங்களை கொடுக்க வெண்டும். தமிழ்நாட்டு உழவர்கள் சோர்வடைந்துதற்கொலைப் பாதைக்குள செல்லாமல், நம்பிக்கையோடு போராட்டக் களத்திற்கு வர வேண்டும். நாம் ஒன்றிணைந்து போராடினால் காவிரியைமீட்க முடியும்” எனப் பேசினார்.

நிறைவில், திரு. சிவபுரி பொன்னுசாமி நன்றி நவின்றார். இந்நிகழ்வில், சிதம்பரம், கடலூர், பெண்ணாடம் பகுதிகளைச் சேர்ந்த உழவர்கள்திரளாகப் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

Post a Comment