நேற்று (10.8.2013) அன்று தமிழக உழவர் முன்னணியின் கடலூர்மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கோ.சிவராமன் தலைமையில் நடைபெற்றது. கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. தானே புயல் பாதிப்பு - பயிர்க்காப்பீட்டு தொகை சம்பந்தமாக உயர் நீதி
மன்றத்தில் தொடுக்கப்பட வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. உழவர்கள்
கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள பயிர்காப்பீட்டுத் தொகை பற்றிய விவரங்களை
திரட்டி வழக்கு விசாரணைக்கு உதவ முடிவு செய்யப்பட்டது.
2. தமிழக உழவர் முன்னணியின் கிராமக்கிளைகளின் உறுப்பினர் புதுப்பித்தலை தொடங்கி இம்மாத இறுதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டது.
3. வருகிற 24.8.2013 அன்று சிதம்பரம் நகரத்தில் சேர்க்கப்பட்டுள்ள
உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி நகர பொறுப்பாளர்களை தேர்வு செய்ய முடிவு
செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.ஆறுமுகம்,
ஒருங்கினைப்பாளர் ம.கோ. தேவராசன், மாவட்ட துணை செயலாளர் சரவணன், குமராட்சி
ஒன்றிய செயலாளர் தங்க.கென்னடி, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் என். ஜெயபாலன்
செயற்குழு உறுப்பினர்கள் அ.மதிவாணன், சி.ராஜேந்திரன், பொன்னுசாமி, எஸ்.
ராமகிருஷ்ணன், மு.சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sunday, August 11, 2013
செயற்குழு கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment