Friday, February 26, 2010

இந்தியாவின் 2010 பட்ஜெட்


இந்திய அரசின் உழவர் விரோத அறிவிப்புகளின் தொகுப்பாகவே 2010-11 க்கான வரவு-செலவு திட்டமும் அதையொட்டிய அறிவிப்புகளும் விளங்குகின்றன.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக வேதியியல் உரங்களின் விலையேற்றத்திற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.உரமானியங்களை பெருமளவு திரும்பப் பெற்றுக்கொண்டு அவற்றின் மீதான விலைக் கட்டுப்பாட்டை இந்திய அரசு கைவிட்டுவிட்டது.இதன் விளைவாக யூரியா விலை 10விழுக்காடும் பிற உரங்களின் விலை எந்த கட்டுப்பாடின்றியும் கடுமையாக உயர இருக்கின்றன.

இன்னொரு புறம் பி.ட்டி கத்திரிக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையையும் கூட விலக்குவதற்கான முயற்சி மாண்சாண்டோ விதை நிறுவனத்தின் வலியுறுத்தலால் தலைமை அமைச்சர் தலைமையிலேயே நடக்கிறது.இப்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள உயிரி தொழில் நுட்ப வரைவு சட்டம் மரபீனி மாற்ற தொழில் நுட்பத்திற்கு எதிரான விவாதத்தையே மறுத்து பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு எதிராக கருத்துரைக்கும் உழவர்களையும் அறிவாளர்களையும் கொடுஞ்சிறையில் தள்ளுவதாக மிரட்டுகிறது.இந்திய அரசு உழவர்களை நசுக்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணியாற்ற விரும்புகிறது.என்பத்ற்கு இது மேலும் ஒரு சான்று.

நிதியமைச்சர் முன்வைத்துள்ள வரவு-செலவு பெட்ரோல்.டீசல் விலை ஏறத்தாழ ரூ2.75 உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோலிய பொருட்களின் மீதான விலைக்கட்டுபாடுகளை கைவிடுவதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.இந்த எரியெண்ணெய் விலை உயர்வு எல்லா பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழி ஏற்படுத்துவதோடு வேளாண்மையையும் கடுமையாக பாதிக்கும்.

””தமிழ்நாட்டை பொறுத்தளவில் இந்த பெட்ரோலி பொருட்களின் விலையேற்றம் தேவையற்றது.தமிழ்நாட்டில் இம்மாநில தேவையை ஏறத்தாழ நிறைவு செய்யும் அளவிற்கு பெட்ரோலிய உற்பத்தி உள்ளது.இங்கு கிடைக்கும் பெட்ரோலியத்தை தூய்மைபடுத்தி தமிழ்நாட்டிற்கு வழங்கினாலே உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் விலையை தமிழக மக்களும்,உழவர்களும் சுமக்க வேண்டிய தேவையில்லை.மேலும் பெட்ரோல்,டீசல் விலையில் சுமார் 39 விழுக்காடு இந்திய அர்சு விதிக்கிற வரியின் காரணமாக வ்ருவது.இந்த இரண்டும் இல்லாமல் இருந்தால் இப்போதுள்ள விலையில் பாதி விலைக்கு பெட்ரோல்,டீசலை தமிழகத்தில் வழங்கமுடியும்.””

எனவே இந்திய அரசு மக்களுக்கும்,உழவர்களுக்கும் எதிராக வெளியிட்டுள்ள மேற்கண்ட அறிவிப்புகளை திரும்ப பெற வேண்டுமென தமிழக உழவர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.

0 கருத்துகள்:

Post a Comment